போர் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்த பின்னரும் ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பும், நில அபகரிப்புகளும்,
தொடர்ச்சியாக துரிதகெதியில் எமது தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, தற்பொழுது சர்வதேச சமூகம் எமக்கு நடந்த, நடந்துகொண்டிருக்கும் அநீதியின் ஒருபகுதியை விளங்கிக் கொண்டிருக்கும்.
இந்தவேளையில் சர்வதேச சமூகம் ராஜபக்ச அரசுக்கு எதிராக எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை அச்சுறுத்தி எமது நீதிக்கான போராட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப் பார்க்கின்றது. எழுச்சி கொண்ட தமிழ் மக்களை போராடும் சக்திகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடலாம் என நினைக்கின்றது.
No comments:
Post a Comment