றிலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான தர்மரத்தினம் சிவராம் (தராகி), செல்வராஜா ரஜிவர்மன் (வர்மன்) ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு
இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் உயிர்நீத்த ஊடவியலாளர்களுக்கு தீபங்கள் ஏற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஊடக அமையத் தலைவர் ஊடகவியலாளர் த.வினோயித் தலைமையில் நடைபெற இந்த நிகழ்வில் வர்மனுடைய பணி என்ற தலைப்பில் உதயன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் ஊடகவியலாளர் கு.செல்வக்குமார், நினைவழியா வர்மன் என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய விரிவுரையாளர் ஊடகவியலாளர் ஆ.சபேஸ்வரன், சிவராம் ஒரு முன்மாதிரி என்ற தலைப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் ஆகியோர் நினைவுரையாற்றவுள்ளனர்.
மேற்படி ஊடகவியலாளர்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் துணிச்சலுடன் இருந்து ஊடகப்பணியாற்றியவர்கள். இவர்கள் உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லியதைப் பொறுக்க முடியாத சிங்களப் படையினரும் அவர்களோடு இணைந்த ஒட்டுக்குழுவினரும் இவர்கள் இருவரையும் படுகொலை செய்தமை இங்கு குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment