சித்திரைப் புதுவருட தினத்தன்று கோயிலுக்குச் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்படட்ட சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகம்புரம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment