வடக்கில் சத்தம் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் யுத்தம் ஓயவில்லை என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
நேற்று இந்து ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் அவர் உரையாற்றுகையிலே,
குண்டுகளின் சத்தம் வடக்கில் இருந்தும்,மக்கள் மனதில் இருந்தும் ஓய்ந்து விட்டது ஆனால் இன்னமும் மக்கள் மனதில் இருந்து மறையாத ஒன்று யுத்தம்.யுத்தத்தினால் காவுகொள்ளப்பட்ட உயிர்களை இழந்த மக்களின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை, ஓயவில்லை. சத்தத்தை இல்லாமல் செய்துவிட்டோம்.
ஆனால் யுத்தத்தை இல்லாமல் செய்து விடியலை ஏற்படுத்தி தர வேண்டும்.அதற்கு பாரதம் தான் மக்களை யுத்தத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு நல்லை ஆதீனம் முன்வந்து உதவ வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment