மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலம்பிட்டி மற்றும் அதனை அண்டிய மூன்று கிராமத்து மக்களது நீண்டநாள் பிரச்சினையாக காணப்பட்ட அரைக்கும் ஆலை தொடர்பாக சென்ற மாதம் இடம்பெற்ற
கலந்துரையாடலின் பயனாக அக் கிராமத்துக்கு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சரால் அரைக்கும் ஆலை ஒன்று அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,
28-09-2015 திங்கள் காலை அவ் அரைக்கும் ஆலையின் பணிகளை பார்வையிடச் சென்ற வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு அக்கிராமத்து மக்கள் மற்றும் மதத் தலைவர்களால் அமோக வரவேற்ப்பும் பாராட்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அதனை அடுத்து அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களுடனும் ஊர் தலைவர்கள் ஆகியோருடன் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.எஸ்.ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் அரைக்கும் ஆலை மூலமாக தாமும் அண்டியுள்ள மூன்று கிராமங்களும் மிகுந்த நன்மை அடையவுள்ளதாகவும், இவ்வளவு காலமும் ஒரு அரைக்கும் ஆலை இல்லாமல் தாம் தமது அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் அம்மக்கள் தெரிவித்ததோடு இதனை தமக்கு வழங்கிய மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment