September 29, 2015

ஜெனீவாவில் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கான பரப்புரை! (படங்கள் இணைப்பு)

இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளநிலையில் அத்திரைப்படத்தின்
இயக்குநர் கணேசன் அவர்கள் அதுகுறித்த பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றார்.
“போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அனுசரணையுடன் ஒக்டோபர் 01ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் திரையிடப்படுகிறது.
இச்சிறப்புக் காட்சியை முன்னிட்டு இத்திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் அவர்கள் நேற்று ஜெனீவாவை வந்தடைந்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் இராசதந்திரிகளை நேரில் சந்தித்துவரும் இயக்குநர் கணேசன் அவர்கள், ஒக்டோபர் 01 ம் திகதி திரையிடப்படவுள்ள விடையத்தை கூறிவருவதுடன் சிங்கள இராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பாட்டு வருகின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறிவருகின்றார்.
உணர்வாளரும் இயக்குநருமான கணேசன் அவர்கள் அது குறித்த துண்டறிக்கையினையும் வழங்கிவருகின்றார். அவர் சந்தித்த இராசதந்திரிகள் ஆர்வத்துடன் விடையங்களை செவிமடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் “போர்க்களத்தில் ஒரு பூ” திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடுவதற்கான அனுமதி உள்ளிட்ட ஏற்பாடுகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேற்கொண்டுவருகின்றது.



No comments:

Post a Comment