இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையின்போது, உள்ளூரில் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளை தவிர்த்துக்கொள்வதற்காக சர்வதேச பங்களிப்பு அவசியமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா
பணிப்பாளர் ஜோன் பிஸர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு தொடர்பில் வலுவான உறுதிப்பாட்டு யோசனை நிறைவேற்றப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், குறித்த யோசனையானது இலங்கை அரசாங்கத்தின் சட்டத்திற்குள் தெளிவான தோற்றத்தை பெறவேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை பெறும் வகையில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதனைவிட பாதகமான சட்டமொன்றை கொண்டுவந்துவிடக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment