கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம்
சாம்பூர் மக்களின் பிரச்சனைகளை கண்டறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமட் நேற்று மாலை அங்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக்
கேட்டறிந்தார்.
கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக நிலவும்
பிரச்சினைகள், ஏழ்மை நிலையினை எதிர்கொண்ட குறிப்பிட்ட பகுதி மக்களின்
காணிகள் கடந்த அரசினால் சுவிகரிக்கப்பட்டமை, அதன் பின்னர் புதிய ஜனாதிபதி
மைதிரிபால சிறிசேன அதனை மீட்டுக் மக்களிடம் கொடுக்க கையொப்பமிட்டமையின்
பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கை வாபஸ் பெற்று காணிகளைப் உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்று கிளிவெட்டியைச் சேர்ந்த தேவராஜா பிரேம் குமார் என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தமை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகள் உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி அனுமதியளித்ததனை நினைவுபடுத்திய முதலமைச்சர் ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் விடயத்தில் கரிசணையாக இருக்கிறார். எனவே சில விடயங்களில் நாம் அமைதி காத்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி மற்றும் பலரும் சென்று மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment