பிரித்தானியாவை சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்ற Samia, மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர், இரண்டாவது கணவருக்கு தகவல் தெரிவித்தோடு மட்டுமல்லால், உடற்கூறு சிகிச்சையை செய்து முடித்த பின்னர் அவளது உடலையும் அடக்கம் செய்துள்ளனர்.
இதனை அறிந்த Kazam, எனது மனைவியின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது, அவளை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளனர், ஏனெனில் எங்களது திருமணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படியாவது அவர்களது மகள் என்னைவிட்டு பிரிந்து, தங்களிடம் வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர், ஆனால் இது நடக்கவில்லை, இதனால் கோபம்கொண்ட அவர்கள் அவளை கௌரவ கொலை செய்துள்ளனர் என்று பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், உடற்கூறு பரிசோதனையில் Samia கழுத்தில் 7.2 இன்ச் அளவுக்கு காயம் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி அவரது வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனையை பார்த்த பின்னர் கூட பொலிசார், Samia- யின் குடும்பத்தினரிடம் சிறு விசாரணையை நடத்திவிட்டு, அவர்கள் குடும்பத்தார் சொல்வது போன்று இது இயற்கையான மரணம் தான் எனக்கூறி இந்த விசாரணையை முடித்துள்ளனர்.
ஆனால், தனது மனைவியின் மரணம் இயற்கையான மரணம் கிடையாது எனக்கூறிய Kazam, உடற்கூறு பரிசோதனையை ஊடகங்களுக்கு காட்டியதோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என புகார் அளித்ததையடுத்து பாகிஸ்தான் துப்பறியும் துறை இந்த மரணம் தொடர்பான விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையில், உடற்கூறு பரிசோதனையில் Samia தாக்கப்பட்டதற்கான ஆதாரத்தினை அடிப்படையாக கொண்டு, Samiaவின் தந்தை மற்றும் அவரது முதல் கணவரை பொலிசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இதில், Samia வின் முதல் கணவர் Mohammed Shakeel தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
தனது மனைவியின் இறப்பு குறித்து Kazam கூறியதாவது, அவளை அளவுக்கு அதிகமாக நேசித்த எனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, அவள் இல்லாத வாழ்க்கையால் துவண்டு போயுள்ளேன், அந்த வலியினை விவரிப்பதற்கு கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அவளுக்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு போராடுகிறேன் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் கௌரவ கொலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment