June 14, 2016

ttn தமிழ் ஒளியின் "ஊரக பேரொளி விருது -2016"

எமது பாரம் பரிய கலைகளை வளர்க்கும் முகமாகவும் இளையோருக்கு அதனை எடுத்து செல்லும் முகமாகவும்   பிரான்சில் 12.06.2016 ஞாயிறு அன்று தமிழ் தொலைகாட்சி இணையம் ttn கிராமிய நடனப் பொட்டினை
நடாத்தியுள்ளது .காலை 11.30க்கு தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை வாத்திய முழக்கத்தோடு சிறப்பு விருந்தினர் பேராசிரியர் .திரு பாலசுகுமார் அவர்களையும் ,பல்வேறு தமிழ் கட்டமைப்பு செயல்பாட்டார்களையும்  மேலும் மாணவர்களையும்  அரங்கத்துக்கு அழைத்து வரப்பாட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்க பட்டது .
கீழ் பிரிவு ,நடுவண் பிரிவு ,மேற்பிரிவு என்று 3 பிரிவுகளாக 35 குழுவினர் பொட்டியில்  கலந்து கொண்டனர் .விழா ஆரம்பத்தில் கிராமிய நடனப்போட்டி என்று ஆரம்பித்து கிராமியம் தமிழ் அல்ல என்பதால் "ஊரக பேரொளி" என்று அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையின் பொறுப்பாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்  அவர்கள் பெயர் சுட்ட நிகழ்வு மிக விமர்சையாக ஆரம்பிக்கப் பட்டது .தொடர்ந்து  போட்டிகள்  நடைபெற்றதோடு ஊரக பேரொளி என்கின்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது .
மேற்பிரிவில் "ஊரக பேரொளி" என்ற விருதினை குசன் வீல் தமிழ்ச்சோலை மாணவர்கள் கரகாட்டம் நடனத்திற்காக பெற்றுக்கொண்டனர் .இரண்டாம் இடத்தை ஆதி பராசக்தி கலைக்குடம் குறவன் குறத்தி நடனத்திற்காக பெற்றுக்கொண்டது .மூன்றாம் இடத்தை சோதியா கலைக்கல்லூரி தப்பாட்டத்திற்க்காக பெற்றுக்கொண்டது . காலை 11.30 க்கு ஆரம்பமான இந்நிகழ்வு  இரவு 21.30 வரை  அரங்கம்  நிறைந்த மக்கள் வெள்ளத்தோடு இனிதாக நிறைவு பெற்றது .























No comments:

Post a Comment