பீகார் மாநிலம், ரோட்டஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் உள்ளது காஞ்சன்பூர் கிராமம். இங்குள்ள செங்கல் சூளைகளில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது,
ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்த சுமார் 25 மாவோயிஸ்டுகள் 5 செங்கல் சூளைகளில் வேலை செய்த ஊழியர்களை அடித்து உதைத்துள்ளனர். தங்களுக்கு செங்கல் சூளை உரிமையாளர்கள் வரி (லெவி) செலுத்த வேண்டும் என்றும் மிரட்டிச் சென்றுள்ளனர்.
வரியை வசூலிக்கும் நபரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் எழுதப்பட்ட காகிதத்தையும் செங்கல் சூளையில் கொடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளனர்.
இதுபற்றி செங்கல் சூளை உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகளை தேடி வருகின்றனர். மேலும், செங்கல் சூளைகளில் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளைகளில் வந்து மிரட்டிய நபர்கள் டி.பி.சி. அமைப்பைச் சேர்ந்த நக்சலைட்டுகள் என சாசரம் துணைக் கோட்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment