ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், “சட்டமுறையான சூழலை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். பல்வேறு துறைகளில் சட்டத்தின் பாதுகாப்பு நிலை முக்கியமாகும்” என்றும் பிரதமர் லியிடம் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தினார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்த மெர்கல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு லி பாராட்டு தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இரு நாட்டு அரசுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் என்று கூறினார். அதிரபான பிறகு ஏஞ்சலா மெர்கல் சீனாவிற்கு 9-வது முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஜெர்மனி அமைச்சர்கள் மற்றும் 20 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவும் உடன் வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியுடன் அதிக அளவில் வர்த்த உறவு கொண்டுள்ள 4-வது நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகள் இடையே 163 பில்லியன் யூரோ அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment