June 14, 2016

ஐரோப்பிய கால்பந்து போட்டி “சி” பிரிவில் ஜெர்மனி வெற்றி பெற்றது!

15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி-உக்ரைன் அணிகள் மோதின. ஜெர்மனியின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு உக்ரைன் வீரர்களால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.

ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 19–வது நிமிடத்தில் முஸ்டாபியும், 12–வது நிமிடத்தில் பாஸ்டின் சுவெஸ்டின்கரும் கோல் அடித்தனர். உக்ரைன் அணியால் பதில் கோல் போட முடியாதது பரிதாபமே. நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி அணி 2–வது ஆட்டத்தில் போலந்தை 16–ந்தேதி சந்திக்கிறது. அதே தினத்தில் உக்ரைன் அணி வடக்கு அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. மிலிக் 51–வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார்.

No comments:

Post a Comment