பாராளுமன்றத் தேர்தலுக்குரிய வாக்களிப்பு குறிப்பிட்டது போன்று காலை 7 மணிக்கே ஆரம்பமாகியுள்ளது.வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு திரளாக சென்று மிகச் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும்
வாக்களித்துவிட்டு செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக ஒரு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்ற எமது செய்தியாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த காலங்களைவிட இம்முறை வாக்களிப்பு நிலையங்களில் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும், நிலையங்களுக்கு அருகாமையிலும் வீதிகளிலும் பொலிஸார் அதிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிவில் உடையிலும் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.அத்துடன், பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களில் மாறிமாறி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment