இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது திருநெல்வேலி பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல்
மேற்கொண்டுள்ளனர்அம்பாறைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்தின் மீதே ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்து யாழ்.நகர் பகுதியில் இறக்கிவிட்டு தரிப்பிடத்திற்காக பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் டிப்போவிற்கு சென்று கொண்டிருந்த வேளை திருநெல்வேலி சந்திக்கு அருகில் வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இரு நபர்களே பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றதாக பேருந்தின் சாரதி தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


No comments:
Post a Comment