முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவுகூரல்
நிகழ்வும்ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் 18 – 05 – 2016 புதன்கிழமையன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
கங்கேரியன்மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இந்நிகழ்வை தமிழில் செல்வன் அருந்தவம் பகீரதன் அவர்களும் ஆங்கிலத்தில்செல்வி துளசி அவர்களும் தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்வின் தொடக்கமாக முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தில் பலியாகிய மக்களின் நினைவாகவும் இதுகாலவரையில் சிங்களப் பேரினவாதஅரசினால் காலத்திற்குக்காலம் இனப்படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளின் நினைவாகவும் முதன்மைச்சுடர்ஏற்றப்பட்டது.
முதன்மைச்சுடரினை முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தில் சிக்கி தப்பிவந்து தற்போது ஒஸ்ரேலியாவில் புகலிடம் கோரியுள்ளசெல்வன் சிவாநந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் செல்வன் கெளரீகரன்தனபாலசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை திருமதி வாசுகி சிறீதர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்துமுள்ளிவாய்க்காலில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவான திருவுருவப்படத்திற்கு செல்வன் பிரசாத் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் மிகவும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம்செலுத்தினார்கள். தொடர்ந்து தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் பொதுமக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் சுதந்திரமானவாழ்வுக்காக உலகெங்கிலும் உயிர்நீத்த தியாகிகள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் நினைவுரையை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கொற்றவன் நிகழ்த்தினார்.
அவர் தனதுஉரையில் வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களில் அரசபடையினர் வைத்தியசாலைகளின் மீது மேற்கொண்ட எறிகனைத்தாக்குதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் சம்பவங்களை விளக்கியதோடு தான் அனுபவப்பட்ட சில சம்பவங்களையும் மக்கள் மனக்கண்முன்கொண்டுவந்தார்.
அதையடுத்து ஆங்கிலமொழியிலான உரைகளை ஒஸ்ரேலியச் சமூகத்தைச் சேர்ந்த செனட்டர் திரு ஜோண் மடிகன்அவர்களும் மனநல ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திருமதி மரிட்சா தொம்சன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து “முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்……” என்ற பாடலை செல்வன் சஜிந்தன் அவர்கள் மெல்பேர்ண் இளம்கலைஞர்களின் பின்னணிஇசையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் பாடினார்.
அதையடுத்து வன்னியில் இறுதியுத்தநாட்களில்காயமடைந்துதற்போதுஅங்கவீனர்களாகவிருப்பதோடு இறுதி யுத்தத்தின்போது தமது குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து தற்போதும் அந்த வலிகளிலிருந்து மீளமுடியாதுதாயகத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் மூவரின் வலிசுமந்த அனுபவப் பகிர்வுகளை உள்ளடக்கிய காணொளி அகலத்திரையில்காண்பிக்கப்பட்டது.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி மற்றும் ஒஸ்ரேலியத்தேசியக்கொடி என்பன இறக்கிவைக்கப்பட்டதோடு உறுதிமொழியுடன் இரவு 8.15மணியளவில் தமிழர் இன அழிப்பு நினைவுநாள்-2016நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நினைவேந்தல் நிகழ்வில் மெல்பேனில் வதியும்நூற்றுக்கணக்கான பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் வருகைதந்து மண்டபம் நிறைந்த மக்களோடு இந்நினைவேந்தல் நிகழ்வுஇடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment