விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அவரது பிணை மனுவை நிராகரித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 30.6.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடப்பாக கைது செய்யப்பட்டு சந்தேசகத்தின் பேரில் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ரி.எம்.வி.பி.கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தனையும் 30.6.2015 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment