May 19, 2016

களனி கங்கை உச்ச நிலை !ஆபத்தான கட்டத்தில் கொழும்பு?

சீரற்ற கால­நிலை கார­ண­மாக நேற்று களனி கங்­கையின் நீர்­மட்டம் ஏழு அடி வரை அதி­க­ரித்­தது.

இதன்­கா­ர­ண­மாக கொழும்பு நகரின் வெல்­லம் பிட்­டி மற்றும் களனி பகு­தி­களில் வெள்ளப்பெ­ரு க்கும் பன்­ம­டங்கு அதி­க­ரித்­தது. குறித்த பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மக்கள் நேற்று தொடர்ந்தும் வெளி­யே­றிய வண்ணம் காணப்­பட்­டனர்.
தொடரும் வெள்ளப் பெருக்கு காரணமாக கொழும்பு மாவட்­டத்­தில் அதி­க­ள­வி­லான சேதம் ஏற்­பட்­டுள்­ளது. மேலும் களனி உள்­ளிட்ட பிர­சே­தங்கள் முழு­வதிலும் நேற்றைய தினம் மின் விநி­யோகம் தடைப்­பட்­டி­ருந்­தது. களனி நீர் மட்டம் அதி­க­ரித்­தனை அடுத்து பிர­தே­ச­வா­சி­களை வெ ளி யே­று­மாறு இரா­ணுவம் கோரி­யி­ருந்­தது.
கொழும்பு நகரின் வெல்­லம்­பிட்­டிய , கொலன்­னாவை உள்­ளிட்ட பிர­சே­தங்­க­ளி­லி­ருந்து நேற்­றைய தினமும் மக்கள் தொடர்ந்து வெளி­யே­றினர். இருந்­த­போ­திலும் நேற்று கொழும்பு நகரில் குறைந்­த­ள­வி­லான மழை வீழ்ச்­சியே பதி­வா­னது. காலை வேளை­களில் பெரும்­ப­ாலான பகு­தி­களில் நீர் வடிந்­தோட தொடங்­கி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.
எனினும் கொழும்பு நகரில் வெல்­லம்­பிட்­டிய மற்றும் கொலன்­னாவை பிர­சே­தங்­களில் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்­வ­டைந்த வண்­ணமே காணப்­பட்­டன. குறித்த பிர­சே­தங்­களில் மாத்­திரம் 18 ஆயி­ரத்து 756 குடும்­பங்­களை சேர்ந்த சுமார் 94 ஆயி­ரத்து 151 பேர் 16 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 35ஆயி­ரத்து 839 குடும்­பங்­களை சேர்­நத 1 இலட்­சத்து 71 ஆயி­ரத்து546 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 35 ஆயி­ரத்து 725 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 70ஆயி­ரத்து 403 பேர் இடம்­பெ­யர்ந்து 62 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
களனி கங்­கையின் நீர் மட்டம் நேற்று முன் தினம் நீர் மடடம் 6.1 ஆகவே காணப்­பட்­டது. எனினும் நேற்று 7 அடி வரை அதி­க­ரித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் 9 அடிகளை தாண்டும் பட்­சத்தில் நிலைமை மோச­மாக கூடிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் களனி , நவ­கம்­புர, வெல்­லம்­பிட்டி, அவி­சா­வளை, ஹங்­வெல்ல ஆகிய பகு­தி­க­ளுக்கே பாதிப்­புகள் ஏற்­பட்டுள்ளன.
அத்­துடன் நேற்­றைய தினம் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கைகள் அனைத்தும் வழ­மைக்கு திரும்­பி­யி­ருந்­தது. இருந்­தாலும் களனி பிர­தே­சத்தில் வெ ள்ளம் பெருக்கின் கார­ண­மாக பாலத்துறை மற்றும் கொழும்பு கண்டி வீதியின் போக்­கு­வ­ரத்தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.
களனி கங்­கையின் நீர்மட்டம் அதிரித்துள்ளதால், கங்கைக்கு அண்மித்த பகுதியில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்மட்டம் அதிகரிப்பதனால், வெல்லம்பிட்டிய மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் வசிப்போரையும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment