புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட வித்தியா சார்பில் ஆயராவதற்கு முதல் முதலில் பெண் சட்டத்தரணி ஒருவர் முன்வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சாளினி ஜெயபாலச்சந்திரன் என்னும் இளம் சட்டத்தரணியே இவ்வாறு வித்தியாவிற்கான வாதிடுவதற்கு தாமாக முன்வந்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா காடையர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேற்றப்பட்டு ஒரு வருடங்கள் கடந்து விட்டது.
இருப்பிப்பினும் கொலை செய்யப்பட்ட வித்தியா சார்பில் ஒரு சில சட்டத்தரணிகளே தாமாக முன்வந்து வித்தியாவின் கொலைக்கு நீதி கோரி தமது வாதங்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்வைத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் வித்தியாவிற்காக நீதி வேண்டி இளம்பெண் சட்டத்தரணி ஒருவர் தாமாகவே ஆஜராவதற்கு முன்வந்துள்ளார்.
இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற வித்தியாவின் வழக்கில் சட்டத்தரணி ரஞ்சித்குமாருடன் இணைந்து சாளினி என்னும் பெண் சட்டத்தரணியும் ஆஜராகியிருந்தார்.
இருப்பினும் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வேறு பெண் சட்டத்தரணிகள் அங்கு இருந்த போதும் எவரும் வித்தியாவிற்கான ஆஜராவதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment