அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர் தயா கமகேயுடன் வாகனத்தில் வந்திறங்கினார் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்திற்கு தயா கமகேயுடன் வந்த ஜெயானந்த மூர்த்தி அவருடன் பேசிக்கொண்டே கூட்டத்தில் அமர்ந்திருந்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கு ஏன் ஜெயா னந்தமூர்த்தி வந்தார் என்று அம்பாறை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
தயா கமகே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். இவருடன் ஏன் ஜெயானந்த மூர்த்தி இணைந்திருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய வாதிகள் தெரிவிக்கின்றனர்..
லண்டனில் இருந்து நாட்டுக்கு வந்த ஜெயானந்த மூர்த்தி இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாரையும் சென்று சந்திக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சரான தயா கமகேயைச் சந்தித்திருக்கிறார்.
திருக்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்தவர் வேறு எங்கெல்லாம் சென்றார் என்பதோ இவருடன் என்ன தொடர்போ என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ஜெயானந்த மூர்த்திக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment