இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால்,
அதிமுக அலுவலகம் மற்றும் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
முன்னதாக, இன்று காலை ஜெயா டிவியில் ஜெயலலிதாவின் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதில் ஜெயலலிதாவின் ராசிப்படி லக்னத்திற்கு 6ம் இடத்தில் சனி இருப்பதால் எதிரிகள் நசிந்து போவார்கள். அம்மாவிற்கு வெற்றியே கிடைக்கும் என்றார் ஒரு ஜோதிடர். ஜெயலலிதா 25 வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்கவே? அதற்கு பதில் சொன்ன ஜோதிடர், கேது என்பது புரட்சிகளை கொடுக்க கூடிய கிரகம். அன்றைய தினம் 7, 2 என்ற அமைப்புப்படி இருக்கிறது.
ஏழு மிகவும் ராசியானது சிறப்பான மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளனர். வாஸ்துபடி ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்றும். துன்முகி வருடமானது ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஆட்சிமைப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஜோதிடர்களின் கருத்து பளித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தைப் பார்த்தால், அதிமுக தான் மீண்டு ஆட்சி அமைக்கும் என்பது தெரிகிறது.
No comments:
Post a Comment