கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை பதிவாகிய, மழை வீழ்ச்சி, சிறிலங்காவில் பெய்த அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சிறிலங்காவில் கடும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த திங்கட்கிழமை, காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கிளிநொச்சியில் 373.3 மி.மீ மழை கொட்டியிருந்தது.
இது சிறிலங்காவில் பதிவாகிய அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டு, கொழும்பில், 440.2 மி.மீ மழை 24 மணிநேரத்தில் கொட்டியது. அதற்கு முன்னர், 1992ஆம் ஆண்டு, கொழும்பில் 493.92 மி.மீ மழை வீழ்ச்சி பதிவானது. இவையே சிறிலங்காவில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும்.
இந்த நிலையில், கிளிநொச்சியில், கடந்த திங்கட்கிழமை, காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கிளிநொச்சியில் 373.3 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலில் அதிகபட்சமாக, 145.8 மி.மீ மழையும், செவ்வாய்க்கிழமை, மகாஇலுப்பள்ளமவில், அதிகபட்சமாக 267.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment