May 19, 2016

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் படை எடுக்கும் முதலைகள்!

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் மழைவெள்ளத்துடன் வந்த முதலை பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

மழை வெள்ளத்துடன் குடியிருப்புக்குள் நுளைந்த முதலை குறித்த பகுதியில்அமைந்துள்ள கிணற்றினுள் விழுந்துள்ளது, விழுந்த முதலையை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக வெள்ளத்துடன் வருகை தந்த முதலை, குறித்தகிராமத்திற்குள் நுளைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிடிக்கப்பட்ட முதலையை வன ஜீவராசி ணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment