24ம் திகதி மாலை அலரி மாலைகையில் பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்
தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள், இடைக்கால நிவாரண தொகையாக மாதம் ரூ. 2,500 வழங்க உடன்பட வேண்டும்.
இதை வழங்கி விட்டுத்தான், கூட்டு ஒப்பந்த பேச்சைவார்த்தையையோ அல்லது மாற்று தொழில் முறைமை யோசனையையோ தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளனம் முன்னெடுக்க முடியும்.
இது நடைபெறாவிட்டால், பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தோழமை அமைப்புகளுடன் கைகோர்த்து, 25ம் திகதி நடத்தப்பட இருந்த தொழிற்சங்க நடவடிக்கை 26ம் திகதி நடைபெறும்.
நிவாரண தொகையான ரூ. 2,500 கூட வழங்காமல், தொழிலாளர் வாழ்வுடன் விளையாட வேண்டாமென தோட்ட முதலாளிகளுக்கும், இதில் தொடர்புள்ள அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
20ம் திகதி அலரி மாளிகையில் எமது கோரிக்கையின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனையில் பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர், தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தமக்கும், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்களுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுகள் நடைபெறுவதாகவும், கூட்டு ஒப்பந்தம் இன்னமும் அமுலில் இருப்பதாகவும் தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள் கூறினார்கள்.
கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரை நாம் காத்திருக்க முடியாது என்பதால், கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக மாதம் 2,500 ரூபாவை மேலதிகமாக பெருந்தோட்ட தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என்று நாம் தெளிவாக கூறியுள்ளோம்.
இதற்கு கூட்டு ஒப்பந்தத்தை காரணம் காட்டி, தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே 23ம் திகதி தொழில் அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர் ஆகியோருடன் தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுகளை நடத்தி தங்கள் நிலைப்பாட்டை எமக்கு 24ம் திகதி மாலை அறிவிக்கும்படி நாம் கூறியுள்ளோம்.
இந்த அடிப்படையில் 24ம் திகதி மாலை மீண்டும் அலரி மாலைகையில் பிரதமர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளன பிரதிநிதிகள் உடன்பாட்டை தெரிவிக்காவிட்டால், பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தோழமை அமைப்புகளுடன் கரங்கோர்த்து 26ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்.
இன்று நாட்டில் நிலவும் காலநிலையின் காரணமாக நாம் எமது தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்தி வைப்போம் என எவரும் கனவு காண கூடாது. இன்றைய நிலைமைக்கு ஏற்ப எமது நடவடிக்கை அமையும்.
கூட்டு ஒப்பந்தம் இன்னமும் அமுலில் இருப்பதாக, தோட்ட முதலாளிகள் நினைப்பார்களேயானால், அதை ஒப்பந்த தொழிற்சங்கள் ஏற்றுக்கொள்ளுமானால், இந்த இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தட்டும்.
ஆனால், அதுவரை இடைக்கால நிவாரண தொகையை தராமல் தோட்ட முகாமைத்துவ நிறுவன சம்மேளனம் தப்ப முடியாது. அதேபோல் சம்பள உயர்வுக்கு பதிலாக, புதிய ஒப்பந்த அடிப்படையிலான தொழில் முறைமையையும் இப்போது அமுல் செய்ய முடியாது.
முதலில் இந்த இடைக்கால நிவாரண தொகையாக மாதம் 2,500 ரூபாவை பெருந்தோட்ட தொழிலாளருக்கு வழங்கி விட்டு மாற்று தொழில் முறைமைகளை பற்றி நாம் கலந்து பேசுவோம் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுதியான நிலைபாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனையில் நாம் அறிவித்துள்ளோம்.

No comments:
Post a Comment