யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.
குறித்த தகவலை அறிந்த யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பிரிவினர் இன்று புதன்கிழமை காலை செம்மணி வீதியில் வைத்து சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த வாரம் 40 கிலோ கஞ்சாவுடன் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment