September 2, 2016

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்ற நிலையில், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.


காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சனை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பார்க்காரர்கள் தாங்கியிருப்பதுடன், இதில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, ஐ.நா. செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் விதமான போராட்டங்கள் யாழ். நல்லூர் பகுதி மற்றும் யாழ். பொது நூலகப்பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment