விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இலங்கை பிரஜையொருவர் புனே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜேர்மனுக்கு பயணிக்க முற்பட்ட வேளையில், புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் புனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுதன் சுப்பையா என தன்தை அடையாளப்படுத்தியுள்ளார். முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த அவர், கடந்த 2010ஆம் ஆண்டு டுபாய்க்கு சென்று அங்கு பணியாற்றி வந்துள்ளார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பி, 2015ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை சென்றுள்ளார். சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு சென்று மீண்டும் நாடு திரும்பாது அங்கு தங்கியிருந்த நிலையிலேயே இவர் போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜேர்மனுக்கு பயணிக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளதாகவும், அவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்வதற்கு பதிலாக அவரை கறுப்பு பட்டியலில் இணைக்கவுள்ளதாகவும் இந்திய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment