September 2, 2016

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு!

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.


ஆழியவளை கிராம அலுவலர் வல்லிபுரம் தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் எஸ். சிறீபாஸ்கரன், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை செயலாளர் ரா.மோமதி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த வீதி இப்பிரதேச மக்களாலும், புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடனும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment