யாழ். இராணுவ படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எல்லே சுற்று போட்டிகள் யாழ் .மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இன்று காலை ஆரம்பமான போட்டிகள் நாளைய தினமும் நடைபெறவுள்ளன.
இச் சுற்றுப்போட்டியில் யாழ் மற்றும் தெற்கை சேர்ந்த விளையாட்டு கழகங்களும், பொலிஸ் முப்படைகள் உள்ளடங்கலாக 31 அணிகள் பங்குபற்றுகின்றன.
இதேவேளை இச் சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், தான் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையென முதலமைச்சர் தெரிவித்ததாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அவர் இதனைக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment