மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கவிஞர் மேமன்கவி தலைமை தாங்கினார்.
இலக்கியப் புரவலர் காசிம் உமர் அவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் கலந்து கொண்டார் . நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் வரவேற்புரையினை கீர்த்திஷா றொபேட் வழங்கினார். நூலின் அறிமுக உரையினை வளரி எழுத்துக்கூடம் முதன்மை நிர்வாகி அருணாசுந்தரராசன் வழங்கினார்.
வாழ்த்துரைகளை கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் தம்பு சிவா வன்னிப் படைப்பாளிகள் சார்பாக செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சிஇ எழுத்தாளர் வசந்தி தயாபரன் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை ஆகியோர் வழங்கினர். நூலினை நக்கீரன் மகள் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் விமர்சன உரையினை கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் வழங்கினார்.
சிவமீரா நினைவு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றோர்க்கான பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர். ஏற்புரையினை அற்றைத் திங்கள் கவிதை நூலின் ஆசிரியர் நக்கீரன் மகள் வழங்கினார். நன்றியுரையினை றொபேட் கெனடி வழங்கினார். மண்டபம் நிறைந்த உறவுகளுடன் இடம்பெற்ற இக்கவிநூல் வெளியீட்டு விழா நல்நிறைவுடன் நிறைவேறியது.
No comments:
Post a Comment