ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு இன்று ஜனாதிபதி தலைமையில் கூடியது. இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பிலான விசேட குழு ஒன்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் நிமல் சிறிபாலடி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பி. திசாநாயக, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணக்கப்பாடுடன் கூடிய அரசியல் ஒன்றை முன்னெடுத்துத் செல்வதற்கு தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment