ஒட்டுசுட்டான் தட்டாமலை செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குழியும் பற்றையுமாக மூடிக் காணப்படுகின்றது.
இந்த வீதியானது முல்லைத்தீவு RDD க்குச் சொந்தமான போதிலும் பலஆண்டுகாலமாக இந்த வீதி கைவிடப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. பெரிய இத்திமடு தட்டாமலை பழம்பாசி தண்டுவான் ஆகிய கிராம மக்கள் பிரதேச செயலக நடவடிக்கைகளுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கே சென்று வருவது இவ் வீதி வழியாகவே.
இவ் வீதியானது காட்டுப்பாதையான போதிலும் இவ் வீதி 2 பக்கங்களும் பற்றைகள் மூடிக்காணப்படுவதனாலும் வீதி கிடங்காகவும் குழியாகவும் காணப்படுவதனால் சிறுவர்களும் பெண்களும் இந்த வீதியினால் போக்குவரத்து செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது அடுத்த மாதத்தில் பெரிய இத்திமடு நாதம்பிரான் ஆலயத்தின் பொங்கல்விழா இடம் பெறவுள்ளதனால் தூக்கு காவடிகள் கூட வீதி வழியாக வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிப்பதோடு இவ் வீதியினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக துப்பரவு செய்து தரும்படி இப் பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment