June 9, 2016

பேரறிவாளனுக்கு தகவல் வழங்க ஏர்வாடா சிறைச்சாலைகள் அதிகாரிகள் அனுமதி மறுப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் கோரி இருந்த தகவல்களை வழங்க ஏர்வாடா சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடிகர் சஞ்சை தத் தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்ற தகவலை வழங்குமாறும், அது தமது விடுதலைக்கு உதவியாக இருக்கும் என்றும் பேரறிவாளன் மனு ஒன்றை அனுப்பி இருந்தார் .
எனினும் மூன்றாம் நபர் குறித்த தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவித்து, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த மனுவை மறுத்துள்ளனர்
இதற்குமுன்னர் மனுவில் திகதி மாற்றப்பட்டதாக தெரிவித்து மனு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment