உலக அகதிகள் தினம் இன்று என அறிமுகப்படுத்துவதை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த
இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் இது 2014-ம் ஆண்டை விட 5.8 மில்லியன் அதிகம் என்றும் அமைப்பு கூறியுள்ளது. மக்களின் இடம்பெயர்வுக்கு வன்முறை, உள்நாட்டு போர் மற்றும் வறுமை முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
உலகல் உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 7.349 பில்லியன் என்று அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது . இதன்படி ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ அகதியாக இடம்பெயர்வதாகவும், அதிகபட்சமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 5 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சிரியா (4.9 மில்லியன்), ஆப்கானிஸ்தான்(2.7 மில்லியன்), சோமாலியா(1.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன என்றும் ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது .
மேலும் ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி கூறுகையில், “உலக நாடுகள் அகதிகள் பிரச்சனையில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment