பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையயில் வைத்தியரின் கவனயீம் காரணமாக மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது.
14.06.2016 அதிகாலை 5.00am மணியளவில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 7 மாதக்கர்ப்பிணிப் பெண் சுகயீனம் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் 6.30am வரையில் எந்தவித சிகிச்சையும் அவருக்கு வழங்காததால் கணவன் தாதியிடம் சென்று சிகிச்சை செய்யும் படி இரு முறை கூறியும் எதுவித சிகிச்சையும் நடைபெறவில்லை.
அதன் பின்னர் மேல் வைத்திய அதிகாரிக்கு தெரியப்பபடுத்திய பின்பே வைத்திய அதிகாரி வந்து பார்வையிட்டு 8.45am மணிக்கு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
பின்பு நஞ்சு ஊறிய நிலையில் 11.30 am க்கு பெண் குழந்தை பிரசவிக்கப்பட்டு 15.06.2016 மாலை 2.00pm மணிளயவில் குழந்தை மரணமடைந்தது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை அதிகாரி கூறுகையில் 30 நிமிடம் சென்றிருந்தால் தாயையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்ட்டிருக்கும் என்று கூறினார்.
நேரத்துக்கு வைத்தியம் பார்க்காது, மேலதிக சிகிச்சைக்காக அதற்கு தகுதியான வைத்திசாலைக்கு அனுப்பாது மந்திகை ஆதார வைத்தியசாலை மேற்கொண்ட முறையற்ற செயலே குழந்தை மரணம் அடைய காரணம்.
இனிவரும் காலத்தில் இவ் வைத்தியசாலையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறலாம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.
No comments:
Post a Comment