நீதிமன்ற வளாகத்தில் கடந்த
புதன்கிழமை போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத்
தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் இன்று பார்வையிட்டுள்ளார்.
நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர்
என்.கே.இலங்கக்கோனும் பார்வையிட சென்றுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை
வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்துக்கு கொண்டு
வரப்படுகின்றனர் எனக்கருதிய சிலர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு, பொலிஸாரின்
பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைந்து நீதிமன்ற கட்டடத்தின் மீது கற்கள்
கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சட்டத்தரணியின் கார் உட்பட 3 வாகனங்களை அவர்கள் சேதமாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலைமைகளைப் பார்வையிடும் பொருட்டு, பிரதம நீதியரசர் யாழ்ப்பாணம் வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன், யாழ்.நீதிமன்றத்தில் நின்றிருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோருடன் கலந்துரையாடி விடயங்களை அறிந்து கொண்டார்.

No comments:
Post a Comment