பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக முறையின் வீழ்ச்சியே
யாழ்ப்பாணத்தில் 18 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு
கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம் இதனை தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்துக்கின்றனர். வடக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம் என்று தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இலங்கை அரசாங்கம் வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்ய ஏது நிலை ஏற்பட்டு விடும் என்று வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையிலேயே பேராசிரியரின் கருத்து வெளியாகியுள்ளது.
30 வருட போரினால் பாரம்பாரிய குடும்ப மற்றும் சமூக கட்டுப்பாட்டு பொறிமுறை செயலிழந்தது போரின் பின்னர் மனித வள முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
போரின் பின்னர் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போயுள்ளது. வெளிநாட்டு கொடுப்பனவுகளை கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும் பேராசிரியர் கூறினார்.
எனவே மீண்டும் சமூக கட்டுப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என்று பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் மதுபானம் உட்பட்ட பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு இலகுவான கிடைக்கின்றன என்று வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment