புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் நடைபெறுமாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கூடுதலான நன்மைகளை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் செயற்பாட்டில் தான் இன்னும் பார்வையாளன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புது தேர்தல் முறைமையில் மட்டுமன்றில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறைமையிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே நன்மைகள் அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment