அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீரமா காளிகோவில் ஆலயத்தின் உண்டியலை அடியோடு உடைத்து அதனுள் இருந்த பணத்தை எடுத்துவிட்டு உண்டியலை கிணற்றுக்குள் வீசிவிட்டு சென்ற திருடன் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நிதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த புதன்கிழமை இரவு ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த உண்டியலை அடியோடு உடைத்து கொள்ளையிடப்பட்டுளது இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றினையடுத்து வஅக்கரைப்பற்று வாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு பொலிசார் கைது செய்தனர் .
இதனையடுத்து கொள்ளையிடப்பட்ட உண்டியலில் இருந்த சில்லறை பணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொடுக்கப்பட்டு அதற்கான தாளாக மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளதுடன் உடைத்த உண்டியலை வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் போட்ப்பட்டுள்ளதாகவும் சிறிதளவு பணம் செலவு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கிணற்றில் வீசப்பட்ட உண்டியல் மீட்கப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட் பணத்தில் ஒருபகுதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை. அக்கரைப்பற்று நிதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment