March 1, 2015

தமிழரசுக் கட்சியில் விசாரணைக் குழுக்கள்!! சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் முடிவுகளுக்கு ஒத்தூதுவதென முடிவு!

தமிழரசுக்கட்சியினிலிருந்து ஜனநாயகத்திற்காக போராடும் தரப்புக்களினை துடைத்தெறிவதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தரப்பு முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதற்கு ஒத்து ஊதி கதிரைகளை தக்க வைக்க
தமிழரசுக்கட்சியின் ஏனைய தரப்புக்களும் முன்வந்துள்ளன.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கும்பலிற்கான விசுவாசத்தை ஏனைய தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வகையில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனது முடிவுகளிற்கு ஒத்துழைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைய கூட்டத்திற்கு அனந்தி மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கும் அனந்தி மற்றும் சிவகரனது அழைப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்திருந்தது. அதற்காக புதிய குற்றச்சாட்டுக்கள் அனந்தி மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் சதீஸ் மீது முன்வைக்கப்பட்டு அதற்கும் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விசாரணைக்குழு பற்றி கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் சொல்வதற்கு ஏதுமில்லையென தெரிவித்தார்.





No comments:

Post a Comment