பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் குறித்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள மாணவர்களிடமும் பேராதனை பல்கலையின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் பலரிடமும் இது குறித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம், அண்மையில் இடம்பெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில் மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமை தொடர்பில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளன. இந்த வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.
இந் நிலையிலேயெ இந்த மோதலால் காயமடைந்த 5 மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமக இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment