September 25, 2015

மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பு சாரதியின் கைதினை கண்டித்து இல்லை(படங்கள் இணைப்பு)

மன்னார் தனியார் போக்குவரத்து பேரூந்துச் சங்கம் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை இலங்கை அரச பேக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்துச் சேவையில்
நேர அட்டணையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே என மன்னார் தனியார் பேரூந்துச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேரூந்து ஒன்றின் மீது கடந்த புதன் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் காரணமாக குறித்த பேரூந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியதோடு அதன் சாரதி மற்றும் பெண் பயணி ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான சாரதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மன்னார் தனியார் பேரூந்து ஒன்றின் சாரதியை மன்னார் பொலிஸார் சம்பவ தினமான புதன் கிழமை இரவே கைது செய்துள்ளனர்.
குறித்த கைதினை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் நேற்று வியாழக்கிழமை(24) காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை(25) மாலை 4 மணி வரை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மன்னார் தனியார் மற்றும் அரச பேரூந்து சங்க அதிகாரிகளுடன் இன்ற வெள்ளிக்கிழமை(25) மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அத்தோடு வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்த மன்னார் தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள் இன்று வெள்ளிக்கிழமை(25) மாலை 4.30 மணி முதல் மீண்டும் கடமையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு மன்னார் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச்சங்க பிரதி நிதிகளுக்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை (28) விசேட சந்திப்பு இடம் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதே வேளை மன்னாரில் நேற்று(24) வியாழன் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை(25) மாலை வரை மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பானது இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுள்ள நேர அட்டவணை மாற்றத்தின் காரணம் என்றும் கைது செய்யப்பட்டுள்ள மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவையின் சாரதி தொடர்பில் இல்லை என மன்னார் தனியார் பேரூந்துச் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment