September 2, 2016

அமெரிக்கா விண்ணில் செலுத்த இருந்த ஏவுகணை வெடித்தது!

அமெரிக்கா விண்வெளியில் செலுத்த இருந்த ஏவுகணை  புளோரிடாவில் பரீட்சார்த்த  சோதனை மேற்கொள்ளப்பட்ட போது வெடித்து விபத்துக்குள்ளானது.

இதனால் புளோரிடாவில் உள்ள கேப் கெனாவரல் விமானத்தளததின் பல மைல் சுற்று வட்டாரப்பகுதி பாரிய பூகம்பம் ஏற்பட்டது போன்று அதிர்ந்து குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கொன் 9 (falcon 9 ) என்ற ஏவுகணை எதிர்வரும் சனிக்கிழமை கெனாவரலில் இருந்து செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.


அமோஸ் 6 என்ற செயற்கைக்கோளை இந்த ஏவுகணை சுமந்த செல்ல இருந்த நிலையில்  இறுதி நேர சோதனைகள் செய்யப்பட்ட வேளையில் பாரிய சத்தத்தோடு ஏவுகணை வெடித்ததாகவும் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலமாக மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது.


ஆளில்லாத ஏவுகணையை செலுத்துவதற்கு முன்பதாக மேற்கொண்ட வோதனைகளின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஆய்வு மையம் நாஸா  விபத்திற்கான காரணம் எதனையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment