August 10, 2016

வவுனியாவில் முதியவர் உண்ணாவிரத போராட்டம்!

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­ல் அமைக்­க­வேண்­டும் என்பதை வலி­யு­றுத்தி தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


இன்று காலை 7 மணிக்கு ஓமந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு முன்னாள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் இன்றைய தினம் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்வரன் எனும் 73 வயதுடைய முதியவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டபோது அதற்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணப்போவதாகக் கூறி வடமாகாணசபை உறுப்பினர்களையும், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஒரு கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட்டியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் இந்த விடயம் விரிவாக ஆராயப்பட்டு ஜனநாயகரீதியில் முடிவை எட்டுவதாகக் கூறி அது முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

முதலமைச்சரும், சம்பந்தனின் கருத்தினை ஏற்று, மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டறிந்தார். இதன் பிரகாரம் ஓமந்தையில் இது அமைவதே பொருத்தமானது என பெரும்பாலானவர்கள் வாக்களித்தனர்.

ஆனால், இதன் பின்னர் நாடாளுமன்றக்குழு கூடி இந்தக் காணிகளைப் பார்வையிடுவதாகவும், ஓமந்தையிலேயே இதனை நிறுவுவதற்கும் முடிவெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரை சந்தித்து இதற்கான முடிவை எடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

அதேசமயம், தாண்டிக்குளத்தைத் தெரிவு செய்துள்ள அமைச்சர் றிசாத் பதியூதீன், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் வவுனியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அன்றைய வடமாகாண ஆளுநராக இருந்த சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சாள்ஸ், நகரசபை தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் இணைந்து ஓமந்தையைத் தெரிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் ஓமந்தை மற்றும் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment