யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம், பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, இன்று தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காங்சேசன்துறை பகுதியில் 63 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், காங்கேசன்துறை வீதிக்கு அருகிலுள்ள தெல்லிப்பளை எம்.பி.சி.எஸ் இன் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த நிலையில், குறித்த பகுதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள போதும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை விட்டு இராணுவத்தினர் வெளியேறவில்லை.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகள் தற்போது பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சொந்த இடத்திற்கு சென்றுள்ளதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment