இலங்கை இராணுவத்தின் விசேட பயிற்சி முகாமில் ஆயுதங்களுடன் முன்னெடுக்கப்படும் பயற்சி நடவடிக்கையால் விடத்தல்தீவு பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
விடத்தல்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணிகள் இதனால் அதிகம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குறித்த பிரதேசத்திற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலையில் குறித்த பிரதேசத்தில் ஆட்லொறி பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த சத்தத்தினால் சில பெண்களின் கர்ப்பங்கள் கலைவதாகவும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.
தன்னாலும் குறித்த சத்தங்களை கேட்க கூடியதாக இருப்பதாகவும், எனவே அரசாங்கம் இந்த முகாமை அகற்ற வேண்டும் எனவும் சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறித்த பயற்சியின் போது வெளியேறும் புகையினால் சுவாசிப்பதில் இங்குள்ள பெரியோர் முதல் சிறியோர் வரை பெரும் சிரமத்திற்கு முகம்கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்னர்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 15 பெண்களின் கர்ப்பங்கள் கலைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை முள்ளிக்குளம், விடத்தல் தீவு, சிலாவத்துறை பிரதேசங்களிள் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் நோக்குடன் 3,524 ஏக்கர் நிலப்பரப்பானது கைப்பற்றப்பட்டு இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக 2011ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் குறித்த விடத்தல் தீவு முகாமானது யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2009 ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:
Post a Comment