March 1, 2015

முல்லைத்தீவில் ''கவிதைப்பட்டறையும் கருத்தாடலும்'' எனும் தலைப்பில் நிகழ்வொன்று நடைபெற்றது!

 முல்லை மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 26.2.2015 மற்றும் 27.2.2015 ஆகிய இரு தினங்களும் ''கவிதைப்பட்டறையும் கருத்தாடலும்'' எனும் தலைப்பில் நிகழ்வொன்று நடைபெற்றது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திரேஸ்குமார் அவர்களின் அனுமதியுடன்
முல்லை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி மதியரசி அவர்களின் ஒழுங்கமைப்பில் இக்கவிப்பட்டறை என்னால் நடாத்தப்பட்டது. முல்லைதாசன் உதவி புரிந்திருந்தார்.
மொழியின் தோற்றம் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பமாகி, கவிதை என்றால் என்ன..? கவிதையின் வகைகள், வாசகர்களின் நிலை, முல்லைமாவட்டக் கவிதைகளின் தன்மை மற்றும் சமகாலத்தில் கவிதையின் தேவையும் தாக்கமும் எனும் தலைப்புக்களில் பட்டறையினை நடாத்தியிருந்தேன்.
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் உயர்தர மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கான நீராகாரம் வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment