நல்லாட்சி தரப்பினர் அமெரிக்காவின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக ஜே.என்.பி கட்சி அறிவித்துள்ளது.
ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆகியனவும் நல்லாட்சிக்காக குரல்
கொடுத்த போதிலும், அமெரிக்காவின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் என ஜே.என்.பி. கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாமில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவே பின்னணியில் நின்று செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியின் அமெரிக்க பாதிப்பு தெளிவாக தென்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு சதி அம்பலமாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் கட்டமாகவே முன்னாள் கடற்படைப் பேச்சாளர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment