நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில்களமிறங்குவதற்கு வடமாகாணசபை உறுப்பினரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்களின் மனைவியுமான அனந்தி சசிதரன் அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்.இதுவரை அதற்கான முடிவுகள் வெளியாகாத நிலையில் இன்று கொழும்பிலுள்ள சக்தி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார்
.
.
தனது வேட்பாளர் விருப்பத்தினை த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததாகவும் இதுவரை எந்த முடிவும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இருந்தும் தனக்கு த.தே.கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது கட்சிக்கு கிடைத்த இரண்டு ஆசனங்களில் ஒன்றை தருவதாக கூறியதாகவும் ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும் எக்காரணம் கொண்டும் வாய்ப்பு வழங்கவேண்டாம் என்றும் செவ்வியில் தெரிவித்தார்.
(இணைய வேகம் குறைந்தவர்கள் 15ஆவது நிமிடத்திலிருந்து 2நிமிடங்கள் காணொளியை பார்க்கவும்)
இதே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியிலேதான் முன்ளாட் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களும் வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் தேர்தலில் நின்று வென்ற பின்னர் தமிழரசுக்கட்சிக்கு மாறிச் சென்றார்கள் என்றும் விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
தாமும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்றும் நீங்களும் வழங்கக்கூடாது என்றும் வாய்ப்பு வழங்கினால் அவர்(அனந்தி சசிதரன்) ஒருவரது கட்டுப்பாட்டில் செயற்படமாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு நடந்துமுடிந்த தேர்தலின் பின்னர் 60 போராளிகள் வரை வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவ இரகசிய முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாகவும் அதனை தன்னால் முழுமையாக உறுதிப்படுத்த முடியாமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நேரடி விவாதத்தின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்துமாறு மாவை சேனாதிராசா அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் நிகழ்ச்சி ஒருபகுதியோடு முடிவடைந்துள்ளது. மற்றைய பகுதி வரும்வாரம் வரவுள்ளது. அதிலும் முக்கியமான செய்திகள் வெளியாகும் என்றும் கலையகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நேரடி விவாதத்தின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்துமாறு மாவை சேனாதிராசா அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் நிகழ்ச்சி ஒருபகுதியோடு முடிவடைந்துள்ளது. மற்றைய பகுதி வரும்வாரம் வரவுள்ளது. அதிலும் முக்கியமான செய்திகள் வெளியாகும் என்றும் கலையகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment