உமக்கு தந்த சீட்டில் நீர் யாருக்கு வேண்டுமானாலும் இடம் கொடும். ஆனால் அனந்திக்குக் கொடுக்க முயன்றால் அதைப் பறித்து விடுவேன் என சுரேஸ்பிரேமச்சந்திரனை அச்சுறுத்தியுள்ளார் மாவை சேனாதிராசா.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு ஆசனங்களைக் கத்திக் குளறி வாங்கிய சுரேஸ்பிரேமச்சந்திரன் அந்த இரு ஆசனங்களில் ஒன்றை வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்திக்கு கொடுக்க போகின்றேன் என தெரிவித்த போது சேனாதிராசா மற்றும் சுமந்திரனும் இன்னும் சிலரும் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கத்தியதால் சுரேஸ்பிரேமச்சந்திரம் ஆடிப்போய்விட்டாராம்.
உடனடியாக தனது முடிவில் இருந்து பின்வாங்கி அந்த ஆசனத்தை இளைஞர்களில் ஒருவருக்கு கொடுப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறினாராம்.
அனந்தி தேர்தலில் போட்டியிட்டால் எல்லோரையும் விட அதிக விருப்பு வாக்குப் பெற்று தங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டுவிடுவாள் என்ற காரணத்தாலேயே அனந்திக்கு கொடுப்பதற்கு சேனாதி விரும்பவில்லை என சுரேஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை அனந்திக்கு இடம் கொடுத்தால் அனந்தியின் விருப்பு வாக்குடன் தனக்கும் வாக்கு வங்கி அதிகரித்திருக்கும் என சுரேஸ் கணக்குப் போட்டதாக கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment